KRC Logo
K.R.COLLEGE OF ARTS & SCIENCE
K.R.NAGAR, KOVILPATTI - 628 503.

Affiliated to Manonmaniam Sundaranar University, Tirunelveli.

K.R.COLLEGE OF ARTS & SCIENCE
K.R.NAGAR, KOVILPATTI - 628 503.

Affiliated to Manonmaniam Sundaranar University, Tirunelveli.

தமிழ்

மாணவர்களின் சாதனைகள்


  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வைரவிழாவை முன்னிட்டும் பாரதி நினைவு நூற்றாண்டை ஒட்டியும் 2021 செப்டம்பர் 11இல் நடைபெற்ற ‘புதியன விரும்பி பாரதி’ எனும் தலைப்பிலான கவிதைப்போட்டியில் உயிர்வேதியியல் துறை இரண்டாமாண்டு மாணவி மா.லாவாண்யா எழுதிய கவிதை மாநில அளவில் 4ஆவது இடத்தைப் பெற்றது.
  • கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முப்பெரும் விழாவை முன்னிட்டுத் தமிழ்த்துறை ‘முத்தமிழ் மன்றம்’ சார்பாக 27.09.2021 மற்றும் 28.09.2021 ஆகிய இரு நாட்களில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சு மற்றும் ஒப்புவித்தல் போட்டிகள் ஒருங்கிணைக்கப்பெற்றன.
  • திருவள்ளுவர் மன்ற பொன்விழாவை (2022) முன்னிட்டு கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பகுதி - 1 பொதுத்தமிழ் பாடம் பயிலும் (ஓராண்டு, ஈராண்டு) மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு முதற்பரிசை ஐந்து மாணவர்களும் இரண்டாம் பரிசைப் பதினான்கு மாணவர்களும் பெறுவதற்கு தமிழ்த்துறை ஊக்குவித்தது.
  • தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு 12.01.2022 அன்று சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு கல்லூரிகளுக்கு இடையிலான பேச்சுப்போட்டியில் கணிதவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி மா.கன்யாஸ்ரீ கலந்துகொண்டு மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றார்.
  • கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனர் கல்வித்தந்தை கே.ராமசாமி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவையொட்டித் தமிழ்த்துறை சார்பாக நிகழ்த்தப்பெற்ற பேச்சுப்போட்டியில் வணிகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவி சகாயரெபினா முதல் இடத்தையும், ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஸ்வாத்திகா இரண்டாம் இடத்தையும், நுண் உயிரியியல் மூன்றாம் ஆண்டு மாணவி ஆண்டாள் கார்த்திகா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். ஓவியப்போட்டியில் நுண் உயிரியியல் மூன்றாம் ஆண்டு மாணவி அபிநயா முதலிடத்தையும் ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு மாணவி வீரபவித்ரா இரண்டாம் இடத்தையும் கணிதவியல் முதலாம் ஆண்டு மாணவி அபிநயாலட்சுமி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
  • 2022 மார்ச் - மகளிர் தின விழாவை முன்னிட்டு கோவில்பட்டி ‘இலக்கிய உலா’ அமைப்புச் சார்பில் நிகழ்த்தப்பெற்ற கலை இலக்கியப் போட்டிகளில் தமிழ்த்துறை சார்பாகக் கலந்து கொண்ட மாணவிகளில் கணிதவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி செல்வி கன்யாஸ்ரீ ‘கலை ஞாயிறு’ பட்டம் பெற்றார்.
  • 22.3.2022 தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மை ஆணையத்தால் நிகழ்த்தப்பெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் மூன்றாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி மா.கன்யாஸ்ரீ பங்கேற்று மாவட்ட அளவில் ஐந்தாம் இடத்தைப் பெற்றார்.
  • 12.08.2022 சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் இரண்டாமாண்டு தொழிற்சார் வணிகவியல் மாணவி பரிசுத் தொகை 2000 பெற்றார்.
  • 2021ஆம் ஆண்டு கல்வியாண்டில் பொதுத்தமிழில் முதலிடம் பெற்ற சமுனாதேவிக்குக் கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம் சார்பில் 23.4.2022 அன்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • 7.08.2022 அன்று இலக்கிய உலாவும் ஜெய் கிறிஸ் அறக்கட்டளையும் இணைந்து கோவில்பட்டி ஆ.வை. மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளை நடத்தியது. இப்போட்டிகளில் மா.கௌரிமனோகரி ஓவியப்போட்டிக்கும், சி.ஜோதிரூபினி கட்டுரைப் போட்டிக்கும், மு.சுவாதிகா பேச்சுப் போட்டிக்கும் ஜெ.காவ்யா ஓவியப் போட்டிக்கும் முதல் பரிசினையும் மா.லாவண்யா சிறுகதைப் போட்டிக்கும் ரா.மதுமிதா கட்டுரைப் போட்டிக்கும் இரண்டாம் பரிசினையும் பூ.பூமிகா கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசினையும் பெற்றுச் சிறப்பித்தனர்.
  • தமிழ்த்துறை சார்பாக 17.09.2022 அன்று கல்லூரி நிறுவனரின் பிறந்த தினத்தை ஒட்டி ‘எழுத்தறிவித்தவன்’ எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பெற்றது. இப்போட்டியில் மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி மா. சுவாதிகா முதல் பரிசினையும் இரண்டாமாண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி மசுரூஸ் நௌவ்ரா இரண்டாம் பரிசினையும் இரண்டாமாண்டு தொழிற்சார் வணிகவியல் மாணவி சகாயரெபினா மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.